இளம் வயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த குஷ்பு

நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 2010-ல் தி.மு.க.வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். பின்னர் தி.மு.க. தலைவர் பதவி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதால் அவரது வீட்டில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 2014-ல் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது குஷ்பு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.

இந்தநிலையில், கொரோனா  பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில் இருப்பதால் திரைப்பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர்,  சகோதரர்களுடன் எடுத்த இளம் வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்புவுக்கு மூன்று அண்ணன்மார்கள் இருக்கின்றனர். 

டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், அவர்களுடன் பாசமான தங்கையாக குஷ்பு போஸ் கொடுக்கிறார்.  மும்பை நாட்களில் இருந்த அரிய படங்களில் ஒன்று... எனது 3 பெரிய சகோதரர்களால் நான் பாதுகாக்கப்படுகிறேன்... என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Card image cap
மாஸ்டர் படம் திரைக்கு வர 3 மாதங்கள் ஆகும் என தகவல்
Card image cap
ஏழை எளிய மக்களுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிய நடிகை பிரணிதா

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு