‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும்

நடப்பு ஆண்டில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி காணும் என, ‘கவுன்டர்பாயின்ட்’ நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை, 4 சதவீதம் அதிகரித்து, 3.10 கோடி போன்கள் விற்பனை ஆகியிருந்தன.குறிப்பாக, ஜனவரி முதல், பிப்ரவரி வரையிலான காலத்தில், புதிய அறிமுகங்கள், தீவிரமான விற்பனை முயற்சிகள் காரணமாக, விற்பனையில் வளர்ச்சி காணப்பட்டது.ஆனால், மார்ச் மாதத்தில் நோய் தொற்று காரணமாக, விற்பனையில் சரிவு ஏற்பட்டுவிட்டது.

இதனால், ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலத்தில், வளர்ச்சி, 4 சதவீதம் என்ற அளவில் நின்றுவிட்டது.இனி, ஜூலை முதல், ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் தான் வளர்ச்சியை காண முடியும் என தோன்றுகிறது.இதையடுத்து, நடப்பு ஆண்டில், விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சமீபத்தில் மொபைல் போன்கள் மீதான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதும், விற்பனையிலும் புதிய அறிமுகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

.கூடவே, தடை நீக்கப்பட்டாலும், சமூக இடைவெளியை பேண வேண்டிய நிலை இருக்கும் என்பதால், தொழிற்சாலைகளும் குறைந்த ஆற்றலுடனே இயங்கும்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Card image cap
வளர்ச்சி 1.1 சதவீதம் ‘கேர் ரேட்டிங்ஸ்’ கணிப்பு
Card image cap
அக்‌ஷய திருதியை தங்கம் ‘ஆன்லைன்’ ஒன்றே வழி

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு