அக்‌ஷய திருதியை தங்கம் ‘ஆன்லைன்’ ஒன்றே வழி

அக்‌ஷய திருதியை. ஆனால், தங்க நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலை. இதையடுத்து, இன்றைய நாளில் வழக்கமாக தங்கம் வாங்குபவர்கள், மாற்று வழி குறித்து யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறை, கடைகளுக்கு சென்று தங்கம் வாங்க முடியாது. இருக்கும் ஒரே வழி, ‘ஆன்லைன்’ மூலமாக வாங்குவது மட்டுமே. பங்குச் சந்தைகளின் மூலமாக, ஆன்லைனில், தங்க இ.டி.எப்.,பில் முதலீடு செய்யலாம்.ஆனால், இதற்கு சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான, ‘டிமேட்’ கணக்கு இருக்க வேண்டும். இதில், 1 கிராம் கூட வாங்கலாம். இதே போல், அரசின் தங்க பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இதற்கிடையே, பல்வேறு தங்க நகை விற்பனையாளர்கள், பல புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக, டாடா குழுமத்தைச் சேர்ந்த, தனிஷ்க், 28ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தடை முடிந்த பின், வாடிக்கையாளர்கள் கையில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். நகையை பார்ப்பதற்கு, ‘வீடியோ’ அழைப்பு வசதியும் செய்யப் பட்டுள்ளது. மேலும், அக்‌ஷய திருதியை நாளை முன்னிட்டு, வாங்கிய நகையை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம் என தெரிவித்துள்ளது.இதேபோல், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும், ஆன்லைன் மூலம் வாங்கும் நகைக்கான பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும், தடை நீங்கியதும் அந்த பத்திரத்தை கொடுத்து, தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், கொரோனா பாதிப்பால் ஆன்லைன் ஆதிக்கம், தங்கம் வரை வந்துவிட்டது.

Card image cap
வளர்ச்சி 1.1 சதவீதம் ‘கேர் ரேட்டிங்ஸ்’ கணிப்பு
Card image cap
‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும்

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு