வளர்ச்சி 1.1 சதவீதம் ‘கேர் ரேட்டிங்ஸ்’ கணிப்பு

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 1.1 சதவீதமாக இருக்கும் என, ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 1.1 முதல், 1.2 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். இது, மேலும் கீழே செல்லவே வாய்ப்பிருப்பிருக்கிறது. சமீபத்தில், வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் குறைவே.வைரஸ் தாக்குதல் எப்போது குறையும் அல்லது முடிவுக்கு வரும் என்பது குறித்து, உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. இதன் பாதிப்புகளையும் தற்போது கணிப்பது கஷ்டமே. இருப்பினும், விவசாயம், அரசு துறைகள் வளர்ச்சி பெற வாய்ப்பிருக்கிறது.

ஆனால், பிற துறைகள் அதிக அழுத்தத்தை சந்திக்கும் நிலையில் தான் உள்ளன. நடப்பு நிதியாண்டில் கட்டுமானம், சுரங்கம், தயாரிப்பு துறைகள் சரிவைக் காணும். நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட், தொழில் முறை சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, 0.5 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே இருக்கும். தேவைகள் குறைவாக இருக்கும். மேலும், வேலைவாய்ப்புகளும் சவாலானதாக இருக்கும்.முதலீடுகளைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே குறைவாகவே இருக்கிறது.இது மேலும் குறையும். அரசின் கவனமும், மூலதன செலவுகளை விட நிவாரணத்தில் தான் அதிகம் இருக்கும்.

தனியார் துறையும், புதிய திட்டங்களை விட, முடியும் திட்டங்களில் அதிக கவனம் எடுக்கும்.தடையை முன்னிட்டு, அத்தியாவசிய பிரிவில் வராத பொருட்களின் போக்குவரத்துக்கு வாய்ப்புகள் இல்லாததால், ஜி.எஸ்.டி., வசூல் இலக்கான, ஒரு மாதத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட முடியாமல் போய்விடும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Card image cap
அக்‌ஷய திருதியை தங்கம் ‘ஆன்லைன்’ ஒன்றே வழி
Card image cap
‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும்

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு