கொரோனா பாதிப்பு: சர்வதேச அளவிலான போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் - ரபெல் நடால்

உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) கூறுகையில், ‘இயல்பான நிலையில் விரைவில் டென்னிஸ் போட்டியை தொடங்க முடியும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. டென்னிசை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் பயணிக்க வேண்டும். ஓட்டலில் தங்க வேண்டும். வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினாலும் கூட, ஒவ்வொரு தொடரையும் ஏற்பாடு செய்வதற்கு நிறைய பேரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. சர்வதேச அளவிலான போட்டிகளில் இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என கருதுகிறேன்’ என்றார்.

Card image cap
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கப்படுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு