சளி பிடிச்சாலே கொரோனாவா இருக்குமோ-ன்னு பயமா இருக்கா? இந்த வைத்தியங்களை உடனே ட்ரை பண்ணுங்க...

காலநிலை மாற்றங்களால் பலருக்கு சளி பிடித்துக் கொள்வது இயல்பு தான். ஆனால் தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் சளி பிடித்தால், பலரும் சாதாரண சளி பிடித்தாலே எங்கு நமக்கு கொரோனா வந்துவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. இதனால் சளி பிடித்தால், மருத்துவரிடம் கூட சென்று சோதிக்க அச்சமாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்துள்ள சளி சாதாரணமானது என்றால், வீட்டில் ஒருசில கை வைத்தியங்களின் மூலமே சரிசெய்யலாம். அதிலும் முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் சளி பிரச்சனைக்கு ஒருசில அற்புதமான கை வைத்தியங்களை மேற்கொண்டனர். இந்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இங்கு இதுவரை நீங்கள் முயற்சித்திராத சளிக்கான சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து சளியில் இருந்து விடுபடுங்கள்.

மிளகு டீ

மிளகு டீ, சாதாரண சளியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, நெஞ்சு நெரிசலைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் மிளகில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இயற்கையாக நிறைந்துள்ளது. மேலும் இந்த பொருளில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது ஒரு நல்ல ஆன்டி-பயாடிக் போன்று செயல்படும்.

மஞ்சள் மற்றும் பூண்டு பால்

ஒரு டம்ளர் பாலில் சிறிது பூண்டு பற்கள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கடுமையான சளியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பாலை தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். ஒருவேளை தொண்டை புண் இருப்பின், மஞ்சள் கலந்த நீரால் ஒரு நாளைக்கு பல முறை வாயை கொப்பளிக்க வேண்டும். மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது செயலில் உள்ள ஒரு வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. ஆகவே இது நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் சூடான பால் நெஞ்சு பகுதியில் உள்ள சளியை மேலே கொண்டு வருகிறது.

இஞ்சி, தேன் மற்றும் துளசி

ஒரு டம்ளர் நீரில் சிறிது துளசி இலைகள், சிறு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இதனால் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இருமலைக் கட்டுப்படுத்தும், இஞ்சி ஒரு வலி நிவாரண மருந்தாக செயல்படும். மேலும் துளசி ஆயுர்வேதத்தில் முக்கியமான மூலிகைப் பொருளாகும். இது சுவாச அமைப்பில் திறம்பட செயல்படும்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயிலை மூக்கு மற்றும் நெற்றிப் பகுதியின் மீது தடவினால், சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமானால் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் யூகலிப்டஸ் ஆயில் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து மூடி வைக்க வேண்டும். பின் அந்நீரால் ஆவி பிடிக்க வேண்டும். முக்கியமாக இந்நீரில் ஆவி பிடிக்கும் போது மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வாயின் வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். யூகலிப்டஸ் ஆயிலில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல், வலி நிவாரண பண்புகள் உள்ளது. இது சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்ற உதவுவதோடு, சுவாசிப்பதில் உள்ள தடையைப் போக்கி, சுவாசத்தை எளிதாக்குகிறது.

கடலை மாவு

கடலை மாவு சளி மற்றும் மூக்கு ஒழுகல் பிரச்சனைக்கு ஒரு நல்ல நிவாரணியாக கூறப்படுகிறது. ஆனால் கடலை மாவின் நறுமணம் அல்லது கடலை மாவு அல்வா சாப்பிடுவது சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றி, சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைப் போக்க உதவுமாம். ஏனெனில் கடலை மாவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் கூடாரம் மற்றும் இது சுவாசப் பாதையை சுத்தம் செய்ய உதவும். மேலும் இதில் வைட்டமின் பி1 என்னும் தையமின் வளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதை உட்கொள்ளும் போது, அது உணவை ஆற்றலாக மாற்றி, உடல் சோர்வைக் குறைக்க உதவும்.

Card image cap
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பலன்கள்..!

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு