அடுப்பு வேண்டாம், சமைக்க வேண்டாம், சத்தான ரெசிபி..!

அடுப்பு வேண்டாம், சமைக்க வேண்டாம் இரண்டே நிமிடத்தில் மிக எளிதில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் எப்படி தயார் செய்வது என்று இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்
  2. பேரீச்சை பழம் (விதை நீக்கியது) – 100 கிராம்
  3. வெல்லம் – 50 கிராம்

செய்முறை

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில் 100 – கிராம் வேர்க்கடலை, 100 – கிராம் பேரீச்சை பழம் மற்றும் 50 கிராம் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த கலவையை தண்ணீர் இல்லாத பவுலில் எடுத்து கொள்ளவும்

பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். (இந்த கலவையுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றையும் சேர்த்து உருண்டை பிடிக்கலாம்)

அவ்வளவுதான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையுள்ள மற்றும் ஆரோக்கியம் உள்ள ஸ்னாக்ஸ் தயார்.

இந்த ஸ்னாக்ஸை மிக எளிதில் இரண்டே நிமிடத்தில் தயார் செய்து, குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் கொடுத்தால் போதும்.

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Card image cap
சத்தான... கார்த்திகை பொரி உருண்டை

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு