இணையவழி மற்றும் ஆன்லைன் தேர்வு முறை : தயாராகும் கல்லூரிகள்

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட கல்லுாரி தேர்வுகளில், செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகளை, மே 15 முதல் 31 வரையும், எழுத்துத்தேர்வுகளை, ஜூலை 1 முதல் 31 வரையும் நடத்தி முடிக்குமாறு, பல்கலை. மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: ஊரடங்கு மட்டுமல்லாது, புயல் உள்ளிட்ட பேரிடர்காலங்களில், கல்லுாரிகளில் வகுப்புகள் தடைபடுவதோடு, தேர்வுகளும் தள்ளிப்போகின்றன. இதனால், மாணவர்களின் படிப்பு வீணாகிறது. இனி வரும் ஆண்டுகளில், ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் என்பது, கட்டாயமாகும் என்பதை, யு.ஜி.சி., சூசகமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அரசுப்பள்ளி மேல்நிலை மாணவர்களுக்கு, இலவச'லேப்டாப்'கள் வழங்கப்படுகின்றன. கல்லுாரிகளில் சேரும்போது, தமிழக மாணவர்களை பொறுத்தவரை, பெரும்பாலானோரிடமும் 'லேப்டாப்'கள் இருக்கின்றன. இருப்பினும், 'லேப்டாப்' உள்ளிட்ட இணைய சாதனங்களை, கல்விக்காக மாணவர்கள் பயன்படுத்துவது குறைவு. தனியார் கல்லுாரிகள், ஆன்லைன் தேர்வு முறைக்கேற்ப தயார்படுத்திக்கொண்டு வருகின்றன. அரசுக்கல்லுாரிகளிலும் இது சாத்தியமே.

இனி, இணையவழி மற்றும் ஆன்லைன் தேர்வு தான் என, யு.ஜி.சி., முடிவெடுத்தால், தமிழக கல்லுாரிகள் அதற்கு எளிதில் தயாராகிவிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Card image cap
ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு