2019ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்? லிஸ்ட் வெளியிட்ட கூகுள்.. சர்ப்ரைஸ் முகங்கள் நிறைய

கூகுள் இந்தியா' தனது வருடாந்திர தேடல் பட்டியலை திரைப்படங்கள், ஆளுமைகள், பாடல்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் செய்திகள் உட்பட பல பிரிவுகளில் இன்று வெளியிட்டுள்ளது.

அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளின் பட்டியலைப் பொருத்தவரை, அபிநந்தன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். லதா மங்கேஷ்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரும் முக்கிய இடங்களை பிடித்தனர்.

இந்த கட்டுரையில், 2019 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்களையும், அவர்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டதற்கான காரணத்தையும் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.

அபிநந்தன்

கடந்த பிப்ரவரியில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானின் ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு நிகழ்வையும் மொத்த இந்தியாவுமே, தன்னுடன் இணைத்துக்கொண்டது. வான்வழி தாக்குதலின்போது, ​​அபிநந்தன், பாகிஸ்தானிய எஃப் -16 போர் விமானத்தை, கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்.ஓ.சி) அருகே சுட்டு வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய விமானமான மிக் -21 பைசன், பாகிஸ்தானின், ஏவுகணை மூலம் மோதி அழிக்கப்பட்டது. அதன்பின், அபிநந்தன், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டார், ஆனால் சுமார் 60 மணி நேரம் கழித்து வாகா எல்லையில் விடுவிக்கப்பட்டார்.

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் நவம்பர் முதல் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். எனவே, அதிகம் தேடப்பட்ட ஆளுமைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 90 வயதான பாடகி, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 11 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் உடல்நலம் பற்றி அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். பிரபல பாடகியின் மரணம் குறித்து இந்த காலகட்டத்தில், வதந்திகள் பரவின. மங்கேஷ்கரின் மருமகள் ராச்சனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். லதா மங்கேஷ்கர் நன்றாக இருக்கிறார் என்றும், போலி அறிவிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொண்டார். லதா மங்கேஷ்கர் சிகிச்சை பெற்ற பின்னர் டிசம்பர் 8 ஆம் தேதி மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், மேலும் ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கிரிக்கெட் பிரபலம்

யுவராஜ் சிங் 17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு 2019 ஜூன் 10ம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகவும் துக்ககரமான நாள். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள், யுவராஜின் நண்பர்களும் சகாக்களும் சமூக ஊடகங்களில் அவர் குறித்த நெகிழ்ச்சி தகவல்களையும், தங்கள் பதிவுகளையும் வெளியிட்டதால் சமூக வலைத்தளங்கள் உணர்ச்சிகரமான செய்திகளால் நிரம்பி வந்தன.

ஆனந்த்குமார்

கணிதவியலாளர் ஆனந்த்குமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஹிருத்திக் ரோஷனின் ஜூலை வெளியீடு 'சூப்பர் 30' என்ற படம். 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில் ஒன்றாகும். விகாஸ் பஹ்ல் இயக்கிய சூப்பர் 30, ரசிகர்கள்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் ஏராளமான நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

விக்கி கவுசால்

Uri : The Surgical Strike திரைப்படத்தின் மூலம், விக்கி கவுசால் இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலமானார். இந்திய ராணுவத்தின் மேஜர் விஹான் சிங் ஷெர்க் வேடத்தில் நடித்ததற்காக, விக்கி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

ரிஷப் பந்த்

இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது திறனை வெளிப்படுத்தத் தவறியதால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். நவம்பரில், வங்கதேசத்துக்கு எதிரான டி -20 சர்வதேச போட்டியில் பந்த் மோசமாக செயல்பட்டதை அடுத்து ரசிகர்கள் #DhoniWeMissYouOnField என்று டேக் போட்டு தோனியை தேடினர்.

ரானு மொண்டல்

ரானு மொண்டல் என்ற திடீர் பிரபல நபர், இந்த பட்டியலில் இடம் பிடித்தது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ரணகட் ரயில் நிலையத்தில் லதா மங்கேஷ்கரின் ஹிட் பாடலான, ஏக் பியார் கா நக்மா ஹை பாடலை ரானு பாடிக்கொண்டு இருந்துள்ளார். அதை பதிவு செய்த ஒருவர், அந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இப்படியாக சமூக ஊடகங்கள் வாயிலாக அகில இந்திய ஃபேமஸ் ஆனவர்தான் ரானு மொண்டல் என்ற பெண். ராணுவின் வீடியோ வைரலாகியதால் அவர் மும்பையில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு அழைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் நீதிபதியாக பங்கேற்ற ஹிமேஷ் ரேஷம்மியா, ராணுவின் குரலால் ஈர்க்கப்பட்டு, அவரது ஹேப்பி ஹார்டி மற்றும் ஹீர் படத்திற்காக பாடுமாறு கேட்டுக்கொண்டார். தேரி படத்தில் தேரி மேரி கஹானி, ஆதத் மற்றும் ஆஷிக்வி மே தேரி 2.0 ஆகிய மூன்று பாடல்களை ராணு பாடி சென்ஷேசனலாக மாறினார்.

தாரா சுத்தரியா

Tara Sutaria மே மாதம் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அன்றிலிருந்து இணையத்தில் இவர் வைரல்தான். 2வது படமான மர்ஜாவான் படத்தில் உடன் நடித்த சித்தார்த் மல்ஹோத்ராவுடன் காதல் கொண்ட பின்னர் அவர் அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்தார். சமீபத்தில், ஆதார் ஜெயினுடன், தாரா விருந்துக்குச் சென்று பரபரப்பை மேலும் அதிகரித்தார்.

சித்தார்த் சுக்லா

பிக் பாஸ் 13 இல் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவரான சித்தார்த் சுக்லா அடிக்கடி அவரது நடத்தைக்காக, டிரெண்ட் பட்டியலில் தோன்றினார். குறிப்பாக ஒரு முறை, சல்மான் கான் அவரை ஆதரித்து பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தபோது வைரலானார்.

கொய்னா மித்ரா

கோயனா மித்ரா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார், ஆனால் அவர் 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பல தலைப்புச் செய்திகளில் வெளியானார். முதலாவதாக, ஜூலை மாதம் காசோலை வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதும், பிக் பாஸ் 13 இல் பங்கேற்ற பிறகும் அவர் ட்விட்டரில் பல முறை ட்ரெண்ட்டானார்.

Card image cap
எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது?

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு