தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 2 செ.மீ மழையும், வால்பாறை மற்றும் சின்கோனா பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 15 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்திவு பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55  கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயினும் சிங்கள ஊடகமோ தமிழ் உணர்வாளர்கள் மீது புலனாய்வுப்பிரிவு நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தது.

இதையடுத்து, சிங்கள சமூக ஊடகங்களில் இது பரவலாக பகிரப்பட்டது.

இந்நிலையில், அதனை தமிழ் ஊடகங்கள் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து சிங்கள இணையம் செய்தியை அகற்றியிருந்தது.எனினும் சிங்கள சமூக ஊடகங்கள் அதனை பகிர்ந்ததையடுத்து  தொடர்புடைய இளைஞன் ஒருவர் குற்றவியல் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். மேலும் ஐவர் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Card image cap
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
Card image cap
வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு