உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்று நோய் முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் டிசம்பர் 1-ந் தேதி தென்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகி விட்டன.

ஆனாலும் கொரோனா வைரசின் கொலைவெறி இன்னும் தீர வில்லை. ஏறத்தாழ 200 நாடுகளில் கால் பதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பெரும்பாலான மக்கள் இப்போது நீண்ட காலமாக வீடுகளில் அடைபட்டுள்ளனர். வீடுதான் அவர்களது உலகமாகி விட்டது.

இந்தநிலையில் நேற்றுமுன்தின நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகமெங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 384ஆக உள்ளது.

8 லட்சத்து 67 ஆயிரத்து 416 பேர் கொரோனா வைரஸ் பிடிக்கு மத்தியில் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

அமெரிக்க மாகாணங்கள் அதிரடி

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு 9 லட்சத்து 64 ஆயிரத்து 864 பேரை கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கி இருக்கிறது. அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையால் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள். 54 ஆயிரத்து 776 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள்.

தற்போது அமெரிக்காவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குவது சற்றே குறைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அந்த நாட்டின் 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டன. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் அங்குதான் ஏறத்தாழ 52 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடர் ஊரடங்கால் அந்த நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. எனவே பல மாகாணங்களும் அதிரடியாக மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதில் மும்முரமாக உள்ளன.

3 மாகாணங்களில் தளர்வு

அந்த வகையில் ஜார்ஜியா, ஓக்லஹாமா, அலாஸ்கா ஆகிய 3 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இப்போதே அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி சொல்லியும் கூட, வேறு வழியின்றி முடி திருத்தும் சலூன்கள், பச்சை குத்தும் மையங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பலவும் செயல்படத்தொடங்கி உள்ளன.

லயன் குழுமத்தின் டென் பிட்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷான் கிங்ரிச், “அட்லாண்டாவில் உள்ள தங்களது உடற்பயிற்சிக்கூடம் இப்போதைக்கு மூடி இருக்கும். நாங்கள் ஏற்கனவே நிறைய தியாகம் செய்து விட்டோம். இப்போதே வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கிவிட்டால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து விட வாய்ப்பு உண்டு. எனவே நாங்கள் அதைச்செய்யவில்லை” என்று கூறினார்.

ஆனால் மற்றவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தங்கள் செயல்பாடுகளை தொடங்கி விட்டனர்.

டெக்சாஸ் மாகாணத்தில், சில்லரை விற்பனையை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்திய

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய கடைகளில் குளிர்பானங்கள் தொடங்கி செல்போன் டேட்டா கார்டுகள் வரை கிடைக்கின்றன.

அதே நேரத்தில் ‘ஹாட் ஸ்பாட்’ என்று அடையாளம் காணப்பட்டுள்ள தீவிர பாதிப்புக்குள்ளான நகரப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. குடிசைகளில் வாழ்கிற ஏழைமக்களை இந்த 21-ம் நூற்றாண்டிலும் கொண்டுள்ள இந்திய நாட்டில் 775 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

இந்தியாவில் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த வாரம் முதல் கிராமப்புறங்களில் நடந்து வந்த உற்பத்தி, விவசாய தொழில் துறைகள் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.

சீனாவில் பலி இல்லை

சீனாவைப் பொறுத்தமட்டில் நேற்றுமுன்தினம் தொடர்ந்து 10-வது நாளாக கொரோனா வைரசால் உயிரிழப்பு இல்லை. தென்கொரியாவில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக தாக்கி இருக்கிறது. அங்கு தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20-க்கும் கீழாக தொடர்வது 8-வது நாளாக நீடித்தது. இரண்டாவது நாளாக உயிர்ப்பலியும் கிடையாது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தாக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.

சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதும், பல நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதும் தொடர்கிறது.

இலங்கை

இலங்கையில் மூன்றில் இரு பங்கு இடங்களில் பகல்நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஆனால் 46 பேருக்கு புதிதாக பாதித்ததைத் தொடர்ந்து 24 மணி நேர முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அங்கு 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது இதுவே முதல்முறை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நார்வே நாட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்டேர் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகள் மீதான தடை செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் 7 வாரங்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மே 2-ந் தேதி முதல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடந்து செல்லவும், உடற்பயிற்சி செல்லவும் அனுமதி தரப்படும் என பிரதமர் பெட்ரோ சான்சேஸ் கூறி உள்ளார்.

பெல்ஜியம்- இத்தாலி

பெல்ஜியம் நாட்டில் மே 4-ந் தேதி முதல் ஊரடங்கை விலக்குவதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளில் வழக்கமான பிரச்சினைகளுக்கு சிகிச்சை தரவும், முக கவசம் தைக்கிற தையல்கடைகள் இயங்கவும் அனுமதிக்கப்படும்.

பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாலியிலும் மே 4 முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கைவிட்டு விடக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அங்கு லட்சக்கணக்கானோர் மீண்டும் வழக்கமான பணிகளுக்கு செல்ல இருக்கிறார்கள். ஆஸ்பத்திரிகள், போலீஸ் நிலையங்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இலவசமாக முக கவசம் வினியோகிக்கப்படும் என அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இத்தாலியில் தான் அதிகபட்சமாக கொரோனா வைரசுக்கு 26 ஆயிரத்து 400 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் அங்கு இறந்திருப்பதுதான், மார்ச் 17-க்கு பின்னர் குறைந்த அளவிலான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதால் ஊரடங்கு மாற்றங்களை நிறுத்தி வைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் மே 11-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த இருக்கிறார்கள். அங்கு பரிசோதனை வசதிகள் கூடுதலாக்கப்படுகின்றன.

பிரேசில் நாட்டில் பரிசோதனை வசதிகள் சரிவர இல்லை. ரியோ டி ஜெனிரோ மற்றும் 4 முக்கிய நகரங்களில் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதால், அவை சீர்குலைந்து போகும் நிலையில் இருப்பதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமேசான் பகுதியில் மனாஸ் நகரில் தினமும் 100 பேராவது பலியாவதால் மொத்தமாக சவக்குழி தோண்டி அவர்களை புதைக்கிற கட்டாய நிலை உள்ளது.

Card image cap
சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு
Card image cap
ஊரடங்கால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் - பிரான்ஸ் சுகாதார மந்திரி பெருமிதம்
Card image cap
போதைப்பொருளுடன் ஆயுதங்கள் கடத்திய பிரபல ஹாலிவுட் நடிகர் கைது

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு